2021 ஜூலை 31, சனிக்கிழமை

விவசாயிகளுக்கு உழவு இயந்திரங்களை தொடர்ந்து வழங்க ஐ.சி.ஆர்.சி ஏற்பாடு

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 26 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

வன்னியில் யுத்தம் காரணமாக  பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவர்களது விவசாய நடவடிக்கைகளுக்காக இரண்டு சில்லு உழவு இயந்திரங்களை சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம்  தொடர்ந்து வழங்கும் என சர்வதேச செஞ்சிலுவைச்சங்க குழுவின் வவுனியா பிராந்திய காரியாலய அலுவலர் ஒருவர் தெரிவித்;தார்.

தமது நிதியில் கொள்முதல் செய்யப்பட்ட 700 இரண்டு சில்லு உழவு இயந்திரங்கள்ப்ல் 300 இயந்திரங்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 400 இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளது எனவும் அவர் கூறினார்.  
வன்னியிலுள்ள கமநல சேவைகள் திணைக்களத்தின் ஊடாக பாதிக்கப்பட்ட பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு ஒரு கமக்கார அமைப்பிற்கு ஒரு இயந்திரம் வழங்கப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் - மாந்தை, முசலி, மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இந்த திட்டத்தின் ஊடாக விவசாயிகள் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .