Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Super User / 2011 மார்ச் 26 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
மன்னார் மாவட்ட சித்த ஆயுர்வேத பாதுகாப்பு சபையின் 12ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் இன்று சனிக்கிழமை காலை மன்;னார் மாவட்ட செயலகத்தில் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட ஆயுர்வேத பாதுகாப்பு சபையின் முன்னாள் தலைவர் வைத்தியர் அரசக்கோண் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த பொதுக்கூட்டத்திற்கு மன்னார் மாவட்ட உதவி திட்டமிடல் பனிப்பாளர் யோகநாதன், மன்னார் மாவட்ட சுதேச மருத்துவ திணைக்கள இணைப்பாளர் எஸ்.சிவசுப்பிரமணியம், மன்னார் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எ.ஜே.துரம், மன்னார் நகர சபையின் செயலாளர் ஆர்.வி.குருஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்டத்தினைத் தொடர்ந்து வருடத்திற்கான புதிய நிர்வாக தெரிவுகள் இடம்பெற்றது.
இதன்போது தலைவராக வைத்தயர் மகேந்திரன், செயலாளராக வைத்தியர் பத்திமன், பொருளாளராக வைத்திய கலாநிதி லோகநாதன், உப தலைவராக வைத்தியர் கனேஸலிங்கம், உப செயலாளராக வைத்தியர் திருமதி விஜயலக்ஸ்மி ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
11 minute ago
20 minute ago
25 minute ago