2021 ஜூலை 26, திங்கட்கிழமை

அடிப்படை வசதியின்றி தவிக்கும் வங்காலை, ஆனாள் கிராம மக்கள்

Menaka Mookandi   / 2011 மார்ச் 29 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார், வங்காலை, ஆனாள் நகர் கிராம மக்கள் எவ்வித அடிப்படை வசதிகளுமின்ற வாழ்ந்து வருவதாகவும் குறித்த கிராம மக்களின் நிலவரம் தொடர்பாக அதிகாரிகளின் கவனத்திற்கு பல தடவை கொண்டு வந்தும் இது வரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என அக்கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேற்படி கிராமம் 2007ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த கிராமத்தில் 165 குடும்பங்களுக்கான காணித் துண்டுகளை அரசாங்கம் மக்களுக்கு வழங்கியுள்ளது.

ஆனால் தற்போது 52 குடும்பங்கள் மட்டுமே குடியமர்ந்துள்ளதாக வங்காலை ஆனாள் நகர் மாதர் அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திருமதி எ.ஆர்.வினிபிடா டயேஸ் தெரிவித்தார். இங்கு அடிப்படை வசதிகள் எவையும் செய்து கொடுக்கப்படாமையின் காரணமாக ஏனைய குடும்பங்கள் குடியமரவில்லை.

தற்போது குடியமர்ந்துள்ள 52 குடும்பங்களும் பல சௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவித்தார். குறித்த கிராமத்தில் மின்சார வசதி தற்போது இல்லாததன் காரணமாக பாடசாலை மாணவர்கள் இரவு நேரத்தில் பாடங்களை கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி குறித்த கிராமத்திற்கு அருகாமையில் பாரிய காடுகள் காணப்படுவதினால் இரவில் பாம்புகள் நடமாடித்திரிவதினால் இரவில் மக்கள் நடமாட அஞ்சுகின்றனர்.

எனவே குறித்த கிராமத்திற்கு முதலில் மின்சார வசதிகளை ஏற்படுத்தித்தருமாறு உரிய அதிகாரிகளிடம் கிராம மக்கள் முன்வைத்துள்ளதாக ஆனாள் நகர் மாதர் அபிவிருத்திச்சங்கத்தின் தலைவர் திருமதி எ.ஆர்.வினிபிடா டயேஸ் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .