2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

மன்னாரில் தனியார் போக்குவரத்துச்சங்க ஊழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பு

Menaka Mookandi   / 2011 மார்ச் 30 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

\(எஸ்.ஜெனி)

மன்னாரில் தனியார் போக்குவரத்துச் சங்கத்தினர் இன்று புதன்கிழமை மதியம் முதல் காலவரையற்ற பணிப்பகிஸ்கரிப்பு போரட்டத்தினை நடத்தி வருவதாக அதன் செயலாளர் ஆர்.அன்றன் தெரிவித்தார்.

மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கத்தின் நேரக்கணிப்பாளர் ஒருவர் கடந்த 28ஆம் திகதி இரவு 9 மணியளவில் மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கக் கட்டிடத்தில் வைத்து மது போதையில் வந்த இனம் தெரியாத நபர் ஒருவரினால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட சம்பவத்தினைத் தொடர்ந்தே மேற்படி காலவரையற்ற பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தினை நடத்தி வருவதாக அதன் செயாலாள் ஆர்.அன்றன் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் உடன் முறைப்பாடு செய்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

தற்போது தாக்குதலுக்குள்ளானவர் இன்று புதன்கிழமை திடீர் சுகவீனமுற்ற நிலையில் மன்னார் பொது வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமத்திக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே மன்னாரில் தனியார் போக்குவரத்துச்சங்கத்தினர் காலவரையற்ற பணிப்பகிஸ்கரிப்பினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  \


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .