2021 ஜூலை 31, சனிக்கிழமை

அதிபருக்கு எதிரான ஆர்ப்பாட்டம்: வழக்கு ஒத்திவைப்பு

Super User   / 2011 மார்ச் 31 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் அரிப்பு பாடசாலையின் அதிபரை இடமாற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது பொலிஸாரல் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவர்களை  மீண்டும் எதிர்வரும் 21 ஆம் திகதி  நீதிமன்றில் ஆஜராகுமாறு மன்னார் நீதவான் திருமதி கே. ஜீவராணி உத்தரவிட்டுள்ளார்.

 இவ்வழக்கு விசாரனை இன்று வியாழக்கிழமை மன்னார் நீதவான் நீதவான் திருமதி கே.ஜீவராணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் ஏற்கனவே பிணையில் விடப்பட்ட நால்வரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்காக மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடடார்.

இதேவேளை நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக நீதிமன்றில் ஆஜராகியிருந்த மன்னார் வலயக் கல்விப்பனிப்பாளரிடம் மேற்படி பாடசாலை அதிபர் தொடர்பாக விளக்கம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பாடசாலை அதிபர் தொடர்பாக அறிக்கையினை எதிர்வரும் 21 ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு  உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .