2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

பள்ளிமுனைக் கிராமத்தில் கைவிடப்பட்ட காவலரண் அமைக்கும் பணி

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 10 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார், பள்ளிமுனைக் கிராமத்தில் இராணுவத்தினரால் அமைக்கப்படவிருந்த காவலரண் ஊர்மக்களின் எதிர்ப்பையடுத்து கைவிடப்பட்டுள்ளது.

பள்ளிமுனைக்கிராமத்தில் அமைந்துள்ள நீர்த்தாங்கியிற்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மேற்படி காவலரண் அமைப்பதற்கான திடீர் நடவடிக்கைகளை இராணுவத்தினர் மேற்கொண்டபோது அவ்விடத்தில் ஊர்மக்கள் ஒன்றுதிரண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவ அதிகாரிகளிடம், இந்த இடத்தில் காவலரண் அமைக்க வேண்டாமென ஊர்மக்கள் கேட்டனர். நீண்ட நேரத்தின் பின்னர் குறித்த இடத்தில் காவலரண் அமைக்கப்படமாட்டாதென
இராணுவ அதிகாரி தெரிவித்தார்.

பின்னர் அவ்விடத்திலுள்ள பொருட்களை இராணுவத்தினர் கழற்றி எடுத்துச்சென்றனர். மக்களின் பாதுகாப்பிற்காகவே மேற்படி இடத்தில் காவலரண் அமைக்க இருந்ததாக இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .