Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 11 , மு.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
கியூபா - இலங்கை நட்புறவுச்சங்கத்தின் வவுனியா கிளை அங்குராப்பணம் செய்யப்பட்டுள்ளது. இந்த வைபவத்தில் கியூபாவிற்கான இலங்கை தூதுவரும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
சின்னப்புதுக்குளத்திலுள்ள தம்பா ஹோட்டலில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தலைவராக றோய் ஜெயக்குமார் தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக ஜி.ரி.லிங்கநாதனும் பொருளாளராக கே.தயாபரனும் 11 பேரைக்கொண்ட நிர்வாக குழுவும் தெரிவு செய்யப்பட்டது. தமிழ் பிரதேசத்தில் அங்குராப்பணம் செய்துவைக்கப்பட்ட முதலாவது கிளை இதுவாகும்.
கியூபாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவு மேலும் வளர இவ்வாறான கிளை அவசியமெனக் தூதரக அதிகாரிகள் கூறினர். இலங்கையிலிருந்து வருடாந்தம் 40 மாணவர்கள் கியூபாவில் கல்வி பயில தாம் புலமைப்பரிசில் வழங்கி வருவதுடன், கடந்த வருடம் வவுனியாவிலிருந்து மருத்துவத்துறைக்கு புலமைப்பரிசில் பெற்ற இருவருக்கு முழுமையான உதவிகளை வழங்கி வருவதினையும் இங்கு நினைவுபடுத்தினார்கள். எதிர்வரும் ஆண்டுகளில் இந்த தொகையை அதிகரிக்க உத்தேசித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
11 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
38 minute ago