2021 ஜூன் 24, வியாழக்கிழமை

வவுனியா, செட்டிகுளம், நெடுங்கேணி பிரதேசசபைகளின் முதலாவது அமர்வு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 12 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

வவுனியா, செட்டிகுளம், நெடுங்கேணி பிரதேசசபைகளின் முதலாவது அமர்வுகள் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் அமர்வு வேப்பங்குளத்திலுள்ள அலுவலகத்தில் தலைவர் க.சிவலிங்கம் தலைமையிலும் செட்டிகுளம், நெடுங்கேணி பிரதேசசபைகளின் அமர்வுகள் முறையே  கப்பிரியல் அந்தோணி ஜயா, மு.பாலசுப்பிரமணியம் ஆகியோரின் தலைமையிலும் பிரதேசசபை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

வௌ;வேறு தினங்களில் இந்த கூட்டங்கள் நடைபெறும் என இலங்கை தமிழரசு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. முதலாவது அமர்வுகளுக்கு முன்னர் சபை உறுப்பினர்கள் அனைவரும் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் கூட்டத்தில் பங்குகொள்வார்கள். இந்த நிகழ்வு  கோலாகலமாகவே நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .