Kogilavani / 2011 ஜூன் 24 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த படைச் சிப்பாய் ஒருவர் தனக்குத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கிளிநொச்சிப் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
கெப்பட்டிக்கொலாவைச்சேர்ந்த எஸ். டி. வசந்த வயது 19 என்ற படைச்சிப்பாயே நேற்று மாலை இவ்வாறு தற்கொலை செய்து கொணடுள்ளார்.
இவரது சடலத்தை பார்வையிட்ட கிளிநொச்சி மாவட்ட நீதிபதி பெ.சிவகுமார் மருத்துவ பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி இராணுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .