2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

விளையாட்டு உபகரணங்கள், சீருடைகள் வழங்கி வைப்பு

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், மாந்தை மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடைகள் என்பன சனிக்கிழமை (7) வழங்கப்பட்டன.

கடந்த ஆண்டுக்கான (2014) பன்முகப்படுத்தப்பட்ட பாதீட்டு நிதியிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இதனை வழங்கி வைத்தார்.  

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேவன்பிட்டி சென்சேவியர் விளையாட்டுக்கழகம், அடம்பன் ஐக்கிய விளையாட்டுக்கழகம், காத்தான் குளம் புனித சூசையப்பர் விளையாட்டுக்கழகம் ஆகியவற்றுக்கே இவ்வாறு விளையாட்டு உபகரணங்களும் சீருடைகளும் வழங்கப்பட்டன.

மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.வரப்பிரகாசம், மன்னார் நகரசபை உறுப்பினர் ரட்ணசிங்கம் குமரேஸ், மன்னார் மாவட்ட விளையாட்டு உத்தியோகஸ்தர் எம்.பர்சூக், மாந்தை மேற்கு விளையாட்டு உத்தியோகஸ்தர் அஸார் யுனைட் மற்றும் கழக உறுப்பினர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X