2021 ஜூன் 16, புதன்கிழமை

100 நாள் திட்டத்தில் அரச அதிகாரிகள் மட்டுமே பணியில் ஈடுப்படுத்தப்படவுள்ளனர்

Kogilavani   / 2015 பெப்ரவரி 10 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்


மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத்திட்டத்தில் இராணுவத்தினரையும் அரசியல்வாதிகளையும் ஈடுபடுத்தாது அரச உத்தியோகத்தர்களை மட்டுமே பணியில் ஈடுபடுத்தவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.


முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் புதிய கட்டட தொகுதியை செவ்வாய்க்கிழமை (10) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,


கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 1 இலட்சத்து 30 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருவதாக அறிகின்றேன். 78 வீதமான தமிழர்களும் 13 வீதமான சிங்களவர்களும், 9 வீதமான முஸ்லிம்களும் வாழ்ந்து வருகின்றனர்.


வாழ்வாதாரத்தில் 75 வீதமானவர்கள் விவசாயத்தையும்; 15 வீதமானவர்கள் கடற்றொழிலையும் நம்பி வாழ்கின்றனர்.  தற்போது இந்த மாவட்டத்திலுள்ள பல்வேறு விடயங்கள் தொடர்பாக எனக்கு விளக்கமளித்த இராணுவ அதிகாரிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.  


இந்த மாவட்டத்தில் 10,000 பேர் அரச உத்தியோகத்தர்களாக உள்ளனர். இராணுவத்தில் கடமையாற்றுபவர்களும் 9,000 பேர் உள்ளனர். எல்லோரும் ஒன்று சேர்ந்த புதிய அரசை புதிய ஒரு நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்காக பாடுபட்டு அதன் பலனை இன்று காணக்கூடியதாகவுள்ளது.


எமது அரசு நடைமுறைப்படுத்தும் 100 நாள் வேலைத்திட்டமென்பது மக்களுக்கு நல்ல நிலையை உருவாக்கி வருகின்றது. பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதன் காரணமாக மக்களின் வாழ்க்கைச்சுமை குறைக்கப்பட்டுள்ளது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .