2021 ஜூன் 16, புதன்கிழமை

நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே மாவட்டச் செயலகம் இயங்கியது

George   / 2015 பெப்ரவரி 10 , பி.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்


முல்லைத்தீவு மாவட்ட செயலகம், கடந்த காலத்தில் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இயங்கி வந்ததாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகம், செவ்வாய்க்கிழமை (10) தெரிவித்தார்.


முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவில் தொடக்கவுரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,


யுத்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் இடமாற்றப்பட்டு புதுக்குடியிருப்பில் இயங்கிவந்தது. 2003ஆம் ஆண்டு மீண்டும் மாவட்ட செயலகம் முல்லைத்தீவில் இயங்கத்தொடங்கியது. 2004ஆம் ஆண்டு ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டது.


2008ஆம் ஆண்டு போரால் இடம்பெயர்ந்து புதுக்குடியிருப்பு அம்பலவன் பொக்கணை பகுதிகளுக்கு சென்றது. 2010ஆம் ஆண்டில் மாவட்டச் செயலகம் தனது பணிகளை மீண்டும் ஆரம்பித்தது.  


முல்லைத்தீவு பல இழப்புகளை சந்தித்தும் மாவட்டச் செலயகம் இயங்கி வந்தது. சிறியதொரு பகுதியில், ஆளணி மிகவும் குறைவான நிலையில் மாவட்ட செயலகம் இருந்தது. நெருக்கடிகளுடன் இயங்கிய போதிலும் மீள்குடியேற்றம் போன்ற பல சேவைகளை செய்து வந்தது.


அரசின் நல்லாட்சி என்ற தத்துவத்துக்கமைய நல்லாட்சிக்கான தத்துவங்களை ஒட்டி சிறந்த சேவைகளை மக்களுக்கு வழங்கவேண்டும் என்ற நோக்குடன் இந்த மாவட்டச் செயலகம் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.


சிறந்த சேவையினை எதிர்காலத்தில் மக்களுக்கு வழங்கமுடியும்.  இந்த மாவட்டச் செயலத்தின் முதலாவது கட்டடத்தொகுதி 220 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டடத்தொகுதி வேலைகளுக்கு 250 மில்லியன் ரூபாய் தேவைப்படுகின்றது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .