2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

முசலி பிரதேசத்தில் 3000 ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ளப்படும்-அமைச்சர் றிஷாட்

Super User   / 2010 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

(எஸ்.எம்.மும்தாஜ்)

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவில் அடுத்த வருட முதற்பகுதியில் 3000 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கைத்தொழில் வர்த்தக அபிவிருத்தி அமைச்சருமான ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்தார்.

முசலி பிரதேச செயலகப் பிரிவில் மீள்குடியேறியுள்ள மக்களின் பிரச்சினைகள் பற்றி ஆராயும் முகமாக  விஜயம் செய்த அமைச்சர் அங்குள்ள அம்மக்களின் விவசாய நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்ந்தார்.
 
அமைச்சரின் இந்த விஜயத்தின் போது மரிச்சுக்கட்டி, பாலக்குளி, கரடிக்குளி, கொண்டச்சி, கொக்குப்படையான் ம்ற்றூம் கூலான்குளம் போன்ற பிரதேசங்களுக்கு  சென்று, அப்பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளை நேரில் பார்வையிட்டதுடன் மீள்குடியேறிய மக்களது பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.
 
தற்போது அப்பிரதேச விவசாயிகள் பெரும்போக நெற்சாகுபடி செய்வதற்கு தயாராகி வருகின்றனர். அதற்கான நீரைப் பெற்றுக் கொள்ள குளங்கள் மற்றும் நீர்ப்பாசன கால்வாய்கள் என்பனவற்றை துரிதமாக புனரமைப்புச் செய்வது குறித்தும் அமைச்சர் கவனம் செலுத்தினார்.

அத்துடன் அகத்திமுறிப்பு குளத்தை பார்வையிட்ட அமைச்சர் றிஷா பதியுத்தீன் அக்குளத்தின் கீழ்வரும் 52 குளங்களையும் புனரமைப்பதற்கும், விவசாயிகளின் காணிகளில் வளர்ந்துள்ள காடுகளை துப்புரவு செய்வதற்கும் அதிகாரிகளுக்கு  பணிப்புரை விடுத்தார்.

 

 


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .