Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Niroshini / 2017 ஜனவரி 22 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சி அக்கராயன் குளத்தின் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கிளிநொச்சி விவசாயத் திணைக்களம், விவசாய அமைப்புகள் என்பன விவசாயிகளிடம் வலியுறுத்தியுள்ளன.
4,500 ஏக்கர் வரையான நிலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள காலபோக நெற்செய்கைக்கான நீர், அக்கராயன் குளத்திலிருந்து வழங்கப்படுகின்றது.
அத்துடன்,குளத்தின் வலதுகரை வாய்க்கால் மூலமாக உருத்திரபுரத்தின் நீவில் பகுதியிலுள்ள 1,200 ஏக்கர் வரையான வயல் நிலங்களுக்கும் நீர் விநியோகிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குளத்தின் சிறந்த முறையில் நீரை வயல்களுக்கு பயன்படுத்துமாறும், நீர் வீணாக கழிவு வாய்க்கால்கள் ஊடாக வெளியேறாமால் பார்த்துக்கொள்ளுமாறு விசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரணைமடு குளத்தின் கீழான நெற்செய்கை, வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய நீர்ப்பாசனக் குளங்களில் இருந்து நெற்பயிர்களுக்கு நீர் விநியோகம் செய்ய உரிய திட்டமிடல்களை நீர்ப்பாசனத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago
6 hours ago