Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Niroshini / 2016 ஜூன் 13 , மு.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முறிகண்டி - ஜெயபுரம் வீதியில் அமைந்துள்ள அக்கராயன் சந்தியில் காணப்படும் ஆற்றுக்கு குறுக்கான பாலம் தாழ்வான நிலையில் காணப்படுவதனாலும் மழை காலங்களில் குறித்த பாலத்தின் மேலாக 5 அடிக்கு மேல் தண்ணீர் பாய்வதனாலும் ஒரு வாரத்துக்கு மேலாக அப்பாதை தடைப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக அதனூடாக பாடசாலைகள், மருத்துவமனை, நகரபகுதிக்கு பயணம் செய்யும் அப்பகுதியை சேர்ந்த 5000த்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் அசௌகரியங்களை சந்திப்பதாக அறியக்கிடைகின்றது.
குறித்த இடத்துக்கு விஜயம் செய்த வடமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் மேற்படி பாலம் வீதி அபிவிருத்தி திணைக்களம், நீர்பாசன திணைக்களம் என்பவற்றுடன் தொடர்புபட்டுள்ளமையினால் அத்திணைக்கள அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடியதோடு, குறித்த பகுதியில் தரமான போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத பாலம் ஒன்றை அமைப்பதற்கு மதிப்பீடுகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்தார்.
இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago