2025 ஜூலை 02, புதன்கிழமை

அக்கராயன் வீதியின் புனர்நிர்மாண வேலைகள் ஆரம்பம்

Niroshini   / 2016 ஜூன் 07 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட தென்னியங்குளம் கிராமத்தினூடாக செல்லும் குமுளமுனை அக்கராயன் வீதியின் புனர்நிர்மாண வேலைகள் நேற்று திங்கட்கிழமை மாலை 3.30 மணியளவில் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனால், ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ்வீதிக்காக 2016ஆம் ஆண்டுக்கான மாகாண அபிவிருத்தி நிதியில் இருந்து, வடக்கு வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் 10 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 17 கல்வெட்டுக்களும் 10 கிலோமீற்றர் வீதிக்கு கிரவலிட்டு வாகன போக்குவரத்துக்கு ஏற்றவகையில், இப் புனர்நிர்மாணப் பணிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பிரதம பொறியியலாளர் ஜெகானந்தன், முல்லைத்தீவு மாவட்ட நிறைவேற்றுப் பொறியியலாளர் கௌசிகன் ஆகியோரும் அக்கிராமத்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.​


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .