Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2021 ஏப்ரல் 29 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட், சுப்பிரமணியம் பாஸ்கரன்
நானாட்டான் கமநல கேந்திர நிலையத்தில் சிறுபோக நெற்பயிர்ச் செய்கைக்கான காணிப்பதிவு இடம்பெற்று வரும் நிலையில், இன்று (29) காலை, எவ்வித சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றாத நிலையில், நானாட்டான் கமநல கேந்திர நிலையத்தில் மக்கள் கூடி நின்றுள்ளனர்.
இதையடுத்து, முருங்கன் பொது சுகாதார பரிசோதகர்களின் துரித நடவடிக்கைகளால், குறித்த பகுதியில் ஏற்பட இருந்த அபாய நிலை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
முகக் கவசங்கள் அணியாமலும் போதிய சமூக இடைவெளியை பின்பற்றாமலும், நூற்றுக்கும் அதிகமான மக்கள் அவ்விடத்தில் கூடி நின்றனர்.
இந்த நிலையில் குறித்த விடையம் தொடர்பாக முருகன் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட்டின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து, உடனடியாக விரைந்து செயற்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி, அவ்விடத்துக்கு பொது சுகாதார பரிசோதகர்கள்களை அனுப்பி துரித நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இதன்போது, நானாட்டான் கமநல கேந்திர நிலையத்தில் காணிப்பதிவுகளை மேற்கொள்ள வந்த மக்களை சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக முகக்கவசம் அணிய வைத்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க துரித நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதேவேளை, இன்று (29) காலை, கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் முன்பாக பெருந்திரளான மக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்து காணப்பட்டனர்.
நீதிமன்ற நடவடிக்கைகளிற்காக வருகை தந்த மக்களை, கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உள்ளே அனுமதித்துள்ளது. பிணை பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்த மக்கள் இவ்வாறு நீதிமன்ற வெளி வளாகத்தில் கூடி நின்றதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
3 hours ago