2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

அஞ்சலி நிகழ்வு

Niroshini   / 2017 மே 13 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம்

முள்ளிவாய்காலில் நடந்த அவலத்தையும் அங்கு நடந்த அழிவில்  உயிரிழந்த  மக்களையும் நினைவு கூரும் அஞ்சலி நிகழ்வு, எதிர்வரும் 18ஆம் திகதி மாலை 4 மணிக்கு உட்துறைமுக வீதியில் உள்ள  திருகோணமலை மனித உரிமைக்கு அபிவிருத்திக்குமான நிலயத்தில் நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாட்டுக் கூட்டம், இந்நிலையத்தின் பணிப்பாளர் அருட்தந்தை வி.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, அஞ்சலி செலுத்த விரும்புபவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு தமது அஞ்சலிகளை செலுத்துவதுடன், ஆத்ம சாந்திப்பிரார்தனைகளிலும் கலந்துகொள்ளுமாறு பணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .