Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
George / 2017 பெப்ரவரி 06 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.அகரன்
வவுனியா, பசார் வீதியில் உள்ள பிரபல சுப்பர் மார்க்கெற் ஒன்றில், விற்பனை செய்யப்பட்ட, அடைக்கப்பட்ட குளிர்பானத்தில், இனந்தெரியாத கழிவுப் பொருள் காணப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில், வவுனியா நகரசபையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது, “நகரசபை மண்டபத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வுக்காக, பிளாஸ்டிக் கப்பில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை கொள்வனவு செய்து, நிகழ்வின் போது அவற்றை பரிமாற்றியுள்ளனர்.
இதன்போது, குளிர்பானத்தின் அடிப்பகுதியில் கழிவுகள் இருந்ததை கண்டவர்கள், நிகழ்வு ஏற்பாட்டாளர்களிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.
அதனையடுத்து, வவுனியா நகரசபைச் செயலாளார் இ.தயாபரனின் கவனத்துக்கு இந்த விடயம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதனையடுத்து, வர்த்தக நிலையத்துக்குச் சென்ற வவுனியா நகரசபை செயலாளர், சுகாதார பரிசோதகர்கள், பெட்டி ஒன்றில் பொதிசெய்யப்பட்டிருந்த குளிப்பானங்களை கைப்பற்றியுள்ளனர்.
அதனையடுத்து, வர்த்தக நிலையத்துக்கு எதிராக வவுனியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய சுகாதாரபரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த வர்த்த நிலையமானது, இதற்கு முன்னரும் சீல் வைத்து சில நாட்கள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago