Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2017 பெப்ரவரி 10 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி அக்கராயனில் பொதுச் சந்தைக்கான அடிக்கல் வியாழக்கிழமை (09) நாட்டப்பட்டுள்ளது.
அக்கராயன் கிராம அலுவலர் பசுபதி சபாரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கரைச்சிப் பிரதேச சபையின் செயலாளர் க.கம்சநாதன் சந்தைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
கிளிநொச்சியின் உப நகரமான அக்கராயனில் நீண்டகாலமாக சந்தை இல்லாத நிலைமை காணப்பட்டது.
இந்நிலையில் அக்கராயன் கிழக்கு, மேற்கு, மத்தி, கெங்காதரன் குடியிருப்பு ஆகிய கிராமங்களின் மாதர் சங்கம், கிராம அபிவிருத்திச் சங்கங்கள் அக்கராயனில் சந்தை அமைத்துத் தாருங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தின் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்த நிலையிலும் அக்கராயன் கிராம அலுவலர் பசுபதி சபாரட்ணம் எடுத்த பெரும் முயற்சிகள் காரணமாக இன்று சந்தைக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
அக்கராயன் சந்தியில் இருந்து மருத்துவமனை செல்லும் வீதியில் இச்சந்தை அமையவுள்ளது.
இச்சந்தையின் மூலம் கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெருமாள்குளம், வன்னேரிக்குளம், அக்கராயன்குளம், ஆரோக்கியபுரம், மணியங்குளம், அமதிபுரம், யூனியன்குளம் ஆகிய கிராமங்களின் மக்கள் பயனடைவார்கள். இக்கிராமங்களில் உள்ள மக்கள் தங்களுடைய உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யக் கூடிய நிலைமை ஏற்படும். இதுவரை காலமும் இப்பிரதேச மக்கள் ஸ்கந்தபுரம் பொதுச் சந்தைக்கே நாள்தோறும் சென்று வருகின்றனர். இந்நிலையில் அக்கராயனில் சந்தை அமைய உள்ளமை மக்களுக்கு பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கான இலகுவான வழியை உருவாக்கியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago