2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

அடுத்து என்ன செய்வது? சிந்திக்கவேண்டிய தருணத்தில் தமிழர்கள்

George   / 2017 ஏப்ரல் 22 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

“அடுத்து என்ன செய்வது என்பதனை தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளதுடன் புதிய தலைமை தொடர்பிலும் நகரவேண்டும்” என, வவுனியாவில் இடம்பெற்ற கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வாடி வீட்டில், மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற “தடுமாறும் தமிழ் தலைமைகளால் தளர்வடைகின்றார்களா தமிழ் மக்கள், அடுத்து என்ன?” என்ற தலைமையில் இடம்பெற்ற கருத்தாய்வும் கருத்துப்பகிர்வும் நிகழ்விலேயே இக் கருத்து பகிரப்பட்டிருந்தது.

தற்போதைய தமிழ் தலைமைகள், தமிழ் மக்களின் விருப்புகளை அறிந்து செயற்படும் தன்மையில் இல்லை என்ற கருத்தோட்டத்துடன், அரசாங்கத்தை குற்றம் சாட்டும் நிலையிலும் தமிழ் தலைமைகள் காணப்படவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டது.

இதேவேளை, புதிய அரசியல் அமைப்பு திருத்தத்தில் எவ்வாறான உள்ளடக்கங்களை இணைத்துக்கொள்வது தொடுர்பிலும் தெளிவான நிலைப்பாடுகள் காணப்படவில்லை எனவும் தற்போது மக்கள் ஜனநாயகரீதியான போராட்டங்களை முன்னெடுக்க முற்பட்டுள்ள நிலையில், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அதிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராணுவத்தரப்புடன் கலந்துரையாடும் நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித்தலைவராக உள்ள ஒருவர் இராணுவத்தளபதியை அழைத்துபேச கூடிய நிலையில் இல்லாது, இராணுவ தரப்பிடம் சென்று பேசும் நிலை சிறந்தபோக்காக காணப்படவில்லை எனவும் கருத்துப்பகிர்வு இடம்பெற்றிருந்ததுடன்,  ஐ.நா மனித உரிமை பேரவையில் கூட்டமைப்பு தலைமை நடந்து கொண்ட விடங்களும் விமர்சனத்திற்குள்ளாகியிருந்தது.

இதேவேளை, தமிழ் தலைமைகள் அரசுடன் பேச்சுக்கள் நடத்துகின்றதா என்பதற்குமப்பால் தமிழர்களின் பிரச்சனைகளை வேறு நாடுகளுடன் கலந்துரையாடியுள்ளதா என்பது கேள்விக்குள்ளாகியே உள்ளது.

இதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எக்காத நிலையில் கூட்டமைப்புக்குள் காணப்படும் முரண்பாடான நிலைமைகள் தமிழர்களுக்கான எதிர்கால அரசியல் நிலைப்பாட்டுக்குச் சாதகமாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டதுடன் மாற்று தலைமையொன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிறந்த கருத்தியலோடு உருவாக்கப்படவேண்டும் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டிருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .