Freelancer / 2023 ஜனவரி 26 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் 14 வயதுடைய சிறுமிக்கு தொடர்ச்சியாக போதைப்பொருட்கள் கொடுத்து, இளைஞர்களால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்த நிலையில் சிறுமி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு அபிவிருத்தி உத்தியோகத்தரால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மனநலம் குன்றிய குறித்தம சிறுமி அண்ணனின் நண்பர்களால் போதைப் பொருள் கொடுக்கப்பட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஹெரோயினுக்கு அடிமையான சிறுமியின் அண்ணன் அவனது நண்பர்களிடம் ஆயிரம் ரூபா பணத்தினை வாங்கிவிட்டு நான்கு பேரை அழைத்துக்கொண்டுவந்து சிறுமியுடன் ஒன்றாக இருக்க வைத்துள்ளார்.
சிறுமியின் தந்தை கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தயார் வீதிவேலைக்கு சென்ற பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இந்த சம்பவம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ளது
சிறுமிக்கு இளைஞர்கள் ஒருவகையான இன்ப்பை கொடுத்துவிட்டு அதனை உண்ட சிறுமி மயக்கநிலைக்கு சென்ற நிலையில் சிறுமியினை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியின் விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளது.
பிரதேச செயல அதிகாரிகளின் நடவடிக்கை காரணமாக குறித்த சிறுமி 25.01.2023 இன்று மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் சட்டவைத்திய அதிகாரியின் விசாரணைகளுக்கும் பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்ட போது இந்த விடையம் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சட்டவைத்திய அதிகாரியால் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். R
5 minute ago
37 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
37 minute ago
49 minute ago