Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 நவம்பர் 20 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
'முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறியும் தடைசெய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தியும் கடற்றொழிலில் ஈடுபடுவதை உடன் தடைசெய்ய வேண்டும்' என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சரின் அவதானத்துக்குக் கொண்டுவந்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், 'யுத்தம் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இப் பகுதி மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் வகையில் பிற பகுதிகளைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள், அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு இப்பகுதி மக்களால் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன், தடைசெய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி படைத் தரப்பினரும் கொக்கிளாய் கடற்பகுதியில் கடற்றொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர் என மக்கள் முறையிட்டுள்ளனர்.
இப்பகுதி கடற்றொழிலாளர்கள் ஏற்கனவே இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லைத் தாண்டியதும் தடை செய்யப்பட்டதுமான கடற்றொழிலால் பெரிதும் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், மேலும், மேலும் அவர்களை பாதிக்கக்கூடிய இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.
தொழில் வாய்ப்புகளற்று, மிகவும் கஸ்டமான நிலையில் வாழ்ந்துவரும் இம்மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை ஈட்டிக்கொள்வதில் தடைகள் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே, இதனை அவதானத்தில் கொண்டு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்' என அவர் கோரியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
54 minute ago
1 hours ago