சண்முகம் தவசீலன் / 2018 மார்ச் 14 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு செம்மலைப்பகுதியில் அம்புலன்ஸ் வண்டி மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அம்புலன்ஸ் வண்டி மீது பிரதேச மக்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
நேற்று (13) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த கந்தையா புவனேந்திரன் (வயது 53) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலையில் இருந்து சம்பத்நுவர வெலிஓயா பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கு நோயாளர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த அம்புலன்ஸ் வண்டி, மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவரை மோதியுள்ளது.
இதன்போது, குறித்த நபர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அம்புலன்ஸ் மீது பொது மக்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து தப்பியோடிய சாரதி முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற முல்லைத்தீவு பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago