2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

அம்பகாமம் காட்டிலிருந்து புலிகளின் ஆட்லறி செல்கள் மீட்பு

George   / 2017 பெப்ரவரி 14 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு, அம்பகாமம் காட்டுக்குள் இருந்து, விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆட்லறி செல்கள், இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.

விமானப்படையினரால் குறித்த ஆட்லறி செல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு, குண்டு செயலிழக்கும் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக விமானப்படையினா் தெரிவித்தனர்.

கண்டுபிடிக்கப்பட்ட ஒவ்வொரு   எறிகணையும்  16 கிலோகிராம் எடை கொண்டவை எனவும் விமானப்படையினா் கூறினர்.

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர்,  விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானப் படைத்தளம், அம்பகாமம் காட்டுப்பகுதிக்கு அருகில் காணப்படுகிறது.

தற்போது அது இலங்கை விமானப்படையினரின் பயன்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .