Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 பெப்ரவரி 20 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
- க.அகரன்
“தமிழ் அரசியல்வாதிகளுக்கு, மக்களால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக” வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்று (19) மாலை ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தேர்தல் காலத்தில் அரசாங்கத்தால் அரசியல் இலாப மீட்டுவதுக்காக வாக்குறுதிகளை வழங்கி, எமது மக்களின் ஒற்றுமையை அல்லது வாக்குகளை சிதறடித்து எங்களது பலத்தை குறைப்பதை பார்க்க கூடியதாக இருக்கிறது. குறிப்பாக இம்முறை நடைபெற்ற தேர்தலில் தமிழ் மக்கள் எடுத்த முடிவானது பலருக்கு ஒரு செய்தியைக் கூறுகின்றது. இது மக்களின் மன வெளிப்பாடாகும். இனிவரும் காலங்களில் எங்களிடம் இருக்கின்ற சில தவறுகளை திருத்திக்கொண்டு மக்களிடத்திலே சரியான முறையிலே அணுக வேண்டும். இம்முறை நடந்த தேர்தலின் மூலம் எம்மக்களினால் எமக்கு சிவப்புக் கொடி காட்டப்பட்டுள்ளதுடன் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. எதிர்காலத்திலாவது இதனைப் புரிந்து கொண்டு எங்களுடைய தமிழ் அரசியல்வாதிகளும் கவனமாக தங்களது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.
10 minute ago
43 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
43 minute ago
48 minute ago