2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

அரசியல் கைதிகளின் விடுதலை முரணானது: இராதா

Gavitha   / 2015 நவம்பர் 13 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

அரசியல் கைதிகளின் விடுதலையில் முன்னுக்கு பின் முரணான கருத்துக்கள் காணப்படுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்பு விழா மற்றும் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

'வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் இன்று முக்கிய பிரச்சனையாக உள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக,  முன்னுக்கு பின் முரணான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக கூறி விட்டு 10 இலட்சம் ரூபாய் சரீரப்பிணை என்றவுடன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நாட்டில், 30 வருடங்களாக யுத்தம் நடந்து தற்போது 6 வருடங்களாக சுமூகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே சுமூகமான நிலையில் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது' என்று இதன்போது அவர் குறிப்பிட்டார்.

'மலையக மக்கள் முன்னணியின் தலைவராக சந்திரசேகரன் இருந்த காலத்தில், இவ்வாறான பிரச்சனைகாக குரல் கொடுத்திருந்தார். அவருடைய கட்சியை சேர்ந்தவன் என்ற வகையில் அரசியல் கைதிகளின் விடுதலையை நாம் முற்றுமுழுதாக வலியுறுத்துகின்றோம்' என்றும் அவர் வலியுறுத்தினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .