Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 27 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
“யாழ். மாவட்டத்தில் தற்போது விபத்துகள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை கட்டுப்படுத்துவதில் போக்குவரத்து பொலிஸாரின் அர்ப்பணிப்பு இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது. போக்குவரத்து பொலிஸார் கடமையை கண்ணியமாகவும், விசுவாசத்துடனும் செயற்படுத்துவதன் மூலம் விபத்துகளைக் கட்டுப்படுத்த முடியும்” என, யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித பெர்ணான்டோ தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று (26) போக்குவரத்து பொலிஸாருக்கு அன்பளிப்பு பணம் வழங்கும் நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“நான் போக்குவரத்து பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய காலப்பகுதியில், பல்வேறு பரிசில்களைப் பெற்றிருந்தேன். அதேபோல், எனது பொலிஸ் ஆரம்ப வாழ்க்கையில் இருந்து இன்று வரை, போக்குவரத்து தொடர்பில் திறமையாகச் செயற்பட்டதன் காரணமாக, பொலிஸ்மா அதிபரால் பல்வேறு பதக்கங்களையும் பெற்றிருந்தேன். ஒவ்வொரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் செய்யும் வேலையில் பற்றுவைக்க வேண்டும்.
“நாளாந்தம் அதிகளவான விபத்துகள் மதுபோதையால் ஏற்படுகின்றன. போக்குவரத்து விதியை மீறி மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துங்கள். போக்குவரத்து விதிமுறையை மீறும் சாரதிகளுக்கு தயவு, தாட்சனியம் இன்றி கைது செய்யுங்கள்.
“போக்குவரத்து பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு பிரதி பொலிஸ்மா அதிபர் என்ற ரீதியில் எனது ஒத்துழைப்பு எப்போதும் பொலிஸாருக்கு இருக்கும். நீங்கள் எவ்வளவு வழக்குகளை தாக்கல் செய்கின்றீர்களோ அந்த அளவுக்கு நீங்கள் கௌரவிக்கப்படுவதுடன் அன்பளிப்புகள், பரிசில்கள் என்பன வழங்கப்படும். நேர்மையுடன் செயற்படுங்கள். போக்குவரத்து பொலிஸார் இலஞ்சத்துக்கு அடிமையாகாமல், பணிபுரியும் இடத்து அவர்கள் கௌரவிக்கப்பட வேண்டியவர்களே” எனத் தெரிவித்தார்.
19 minute ago
26 minute ago
30 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
26 minute ago
30 minute ago
3 hours ago