2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

‘ஆக்கபூர்வமான விடயங்களை பிரிந்தால் செய்யமுடியாது’

Editorial   / 2018 ஓகஸ்ட் 22 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

முதலமைச்சராக இருந்தாலும் சரி அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி, பிரிந்து நின்றுச் செயற்பட்டால், ஆக்கபூர்வமான விடயங்களைச் செய்யமுடியாதென, வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.டி.லிங்கநாதன் தெரிவித்தார்.

வவுனியா ஊடக மையத்தில், நேற்று (21) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போ​து, வடமாகாண முதலமைச்சரால், புதிய கட்சியொன்று தொடங்கப்படவுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைவதன் மூலம் மாத்திரமே, தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமெனவும் அதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இந்த விடயத்தில் தலையிட்டு, முதலமைச்சர் உட்பட அனைத்துத் தமிழ்த் தரப்புகளையும் ஒன்றிணைத்து, நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டுமெனவும் கூறினார்.

ஆகவே, அனைவரும் இணைந்து, தேசிய அரசாங்கத்துக்கு எஞ்சியிருக்கின்ற மிகுதி இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயேனும், ஓர் அழுத்தத்தைக் கொடுப்பதன் மூலம் மடடுமே, தமிழ் மக்களுக்குரியத் தீர்வை நோக்கி நகரலாமென, அவர் மேலும் கூறினார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X