Niroshini / 2021 மே 19 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்
புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்;சாலை கொத்தணி, தற்போது, பாரிய பரவலாக உருவெடுத்துள்ளதாகத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் க.விமலநாதன், மக்கள் மிக மிக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றியவர்களில் சிலர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டதைத் தொடர்ந்து அங்கு கடமையாற்றிய 926 பேருக்கு, என்ரிஜன் பரிசோதனை உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளதென்றார்.
சுகாதார வைத்திய அதிகாரியின் வேண்டுகோளுக்கிணங்க படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் முல்லைத்தீவு, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன எனவும், அவர் கூறினார்.
குறித்த ஆடைத்தொழற்;சாலையில் பணியாற்றுபவர்களின் குடும்பங்கள் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேஙச்களிலேயே அதிகளவில் காணப்படுகின்றனரெனத் தெரிவிதத் மாவட்டச் செயலாளர், மூன்று பிரதேசங்கள் தனிமைப்படுத்தி வைத்துக்கொண்டுதான், பிசிஆர் பரிசோதனைகளை முன்னெடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை இனங்காணும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
'மக்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும். வீடுகளை விட்டு வெளியில் வருவதை நிறுத்த வேண்டும். இது ஒரு பாரிய பரவலாக வந்துகொண்டிருக்கின்ற காரணத்தால், மக்கள் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றவேண்டும்.
'உங்களையும் உங்கள் குடும்பத்தினையும் சமூகத்தினையும் பாதுகாக்கும் பொறுப்பு உங்கள் கையில்தான் இருக்கின்றது' என்றும், அவர் கூறினார்.
26 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
40 minute ago
1 hours ago