2021 மே 08, சனிக்கிழமை

ஆணைக்குழுவுக்கு அமைச்சர் டக்ளஸ் வரவேற்பு

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுவை வரவேற்ப்பதாக கடற்தொழில் நீரியல் வழங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலத்தின் சமுதாய வேலைத்திட்டத்தின் கீழ், பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கு 15 இலட்சம் ரூபாய் செலவில் வீடு அமைக்கப்பட்டு, நேற்று (31) பாவனைக்காக ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போது கருத்துத் தெரிவிக்கும் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்தும் கருத்துரைக்கையில், “மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக  புதிய ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை நன்மையான விடயமே. ஆட்சி மாறியுள்ளமையால் நடந்த உண்மைகளை அறிவதற்காக அவ்வாறான குழுக்களை அமைத்து தகவல்களை பெற்றுக்கொள்ளவதுண்டு. அந்தவகையில் அது வரவேற்ககூடிய விடயமே” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X