2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ஆனைவிழுந்தான் பொதுநோக்கு மண்டபம் திறந்து வைப்பு

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

யு.என்.கபிரேட் நிறுவனத்தின் 2.9 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கிளிநொச்சி, ஆனைவிழுந்தான்குளம் பொது நோக்கு மண்டபம், செவ்வாய்க்கிழமை (20) திறந்து வைக்கப்பட்டது.

ஆனைவிழுந்தான் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் க.விஜயராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் மண்டபத்தை திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, கிளிநொச்சி ஆனைவிழுந்தானில் கிராம அபிவிருத்திச் சங்கத்தால் நடத்தப்பட்ட உள்ளூர் உற்பத்திப்பொருள் கண்காட்சியை மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் பார்வையிட்டார்.

இதன்போது தமது உற்பத்தி பொருட்களுக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தித்தருமாறு உள்ளூர் உற்பத்தியாளர்கள் மாவட்டச் செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்தனர். 

கரைச்சி பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன், யு.என்.கபிரேட் நிறுவன கிளிநொச்சி பிரதித்திட்ட முகாமையாளர் சுஹைர் காரியப்பர் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .