Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 06 , பி.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு -புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட தேவிபுரம் பகுதியில், விடுதலைப் புலிகளால் புதைத்துவைக்கப்பட்டதாக நம்பப்படும் இடம் ஒன்றில் ஆயுதங்கள் இருப்பதாக கூறி, கொழும்பில் இருந்து வருகைதந்த பொலிஸ் புலனாய்வு பிரிவினர் தோண்டும் நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்த போதும் அதில் இருந்து எதுவித பொருள்களும் மீட்கப்படவில்லை.
கொழும்பில் இருந்து வருகைதந்த பொலிஸ் புலனாய்வு குழு ஒன்று, குறித்த தனிநபர் ஒருவரின் காணிப்பகுதியில் விடுதலைப்புலிகளின் பாரிய வெடிபொருள்கள் புதைத்து இருப்பதாக தெரிவித்து, வியாழக்கிழமை (04) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரியுள்ளார்கள்.
இதற்கமைய குறித்த தனிபரின் காணிப் பகுதியில் கனரக இயந்திரம் கொண்டு தோண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, குறித்த பகுதியில் அதிகளவான படையினர் குவிக்கப்பட்டு பொதுமக்கள் எவரும் குறித்த இடத்துக்கு செல்லாதவாறு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருந்த போதும் குறித்த பகுதியில் இருந்து எதுவித வெடிபொருள்களும் மீட்கப்படாத நிலையில் திரும்பி சென்றுள்ளார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
20 May 2025