Editorial / 2018 ஓகஸ்ட் 14 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் - மடு திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழா, நாளை (15) காலை 6.30 மணிக்கு, கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில், கொழும்பு மறைமாவட்ட பேராயர் கருதினால், மறைமாவட்ட ஆயர்கள் இணைந்து, இந்தத் திருநாள் திருப்பலியை, கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கவுள்ளனர்.
மடு திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழா, கடந்த 6 ஆம் திகதி மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இதையொட்டி, நவநாள் ஆராதனைகள் இடம்பெற்று வந்த நிலையில், இன்று (14) மாலை வேஸ்பர் ஆராதனை ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, நாளை (15) காலை 6.30 மணிக்கு, திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்பக்கொடுக்கப்படவுள்ளது.
திருப்பலியைத் தொடர்ந்து, திருச்சொரூப பவனி இடம்பெறும்.
மடு திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழாவுக்காக, நாட்டின் பல பாகங்களில் இருந்தும், சுமார் 6 இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
53 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
58 minute ago