Editorial / 2018 மே 01 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை, இடமாற்றம் செய்ய வேண்டாம் என, அப்பகுதி பொது அமைப்புகள், கோரிக்கை விடுத்துள்ளன.
மேலும், கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர்தான், அக்கராயன் பொலிஸ் காவல் பிரிவு, பொலிஸ் நிலையமாக தரமுயர்த்தப்பட்டு, பொறுப்பதிகாரியாக எஸ்.சத்துருரங்க நியமிக்கப்பட்டார் எனவும், இவர் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட கடந்த ஒரு மாத காலத்தில், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்ததாகவும், தற்போது இவருக்கு இடமாற்றம் அளிக்கப்படவுள்ளமை தமக்கு மிகுந்த மனவருத்தத்தை அளிப்பதாகவும், இதனால் குறித்த அதிகாரியை இடமாற்றம் செய்யவேண்டாம் எனவும் மேற்படி கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சட்ட விரோத மணல் அகழ்வுகள், கஞ்சா, கசிப்பு, மர திருட்டு என்பன, அக்கராயன் பிரதேசத்தில் குறைவடைந்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ள அவ் அமைப்புகள், இதனால் குறித்த அதிகாரி தொடர்ந்து அங்கேயே பணியாற்ற அனுமதிக்க அளிக்க வேண்டும் எனவும், பொலிஸ் உயரதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
34 minute ago
36 minute ago
44 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
36 minute ago
44 minute ago
53 minute ago