2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இந்திய மீனவர்கள் எண்மருக்கு பிணை

Princiya Dixci   / 2022 மார்ச் 14 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, இரணைதீவு  கடற்பரப்பில் கடந்த 27ஆம் திகதி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட  குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 08  இந்திய மீனவர்களுக்கும் ஏழு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கால  சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, பிணையில் செல்ல, கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம், இன்று (14) கட்டளையிட்டுள்ளது.

அதேவேளை, இம்மீனவர்களைக் கைது செய்யும்போது இவர்களிடமிருந்த கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் நாணயங்கள் விடுவிக்கப்பட்டதுடன்,  படகு, வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பன அரசு உடைமையாக்கப்பட்டன.

இந்த வழக்கில் இந்திய மீனவர்கள் சார்பாக, இந்தியத் துணைத் தூதரக அதிகாரி ஆஜராகியிருந்தார்.

பிணையில் விடுவிக்கப்பட்டவர்களில் 16 மற்றும் 18 வயது சிறுவர்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .