Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2017 ஜனவரி 31 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவில் இந்த வருடத்திலாவது வெளிச்ச வீட்டினை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “1990 ஆம் ஆண்டுக்கு முன்னர், முல்லைத்தீவில் வெளிச்ச வீடு இருந்தது. போர் காரணமாக வெளிச்ச வீடு அழிந்து விட்டது. 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற கூட்டங்களில், வெளிச்ச வீட்டை அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்து வருகின்றோம். ஆனால் இது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
வெளிச்ச வீடு இல்லாததன் காரணமாக கடலுக்குச் செல்லும் தொழிலாளர்கள் கரைக்குத் திரும்புவதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
குறிப்பாக கடற்சீற்றம், கால நிலை மாற்றங்களின் போது கூடுதலான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும் வெளிச்ச வீடு இல்லாததன் காரணமாக 5,000 வரையான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago