2025 மே 06, செவ்வாய்க்கிழமை

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு

Freelancer   / 2022 ஏப்ரல் 13 , பி.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

யது பாஸ்கர்

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்தேக்கமான இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 35 அடி 5 அங்குலம் ஆக அதிகரித்துள்ளது.

இதனால் தாழ்நிலப்பகுதி மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.

தொடர்ச்சியாக மழை பெய்யுமாக  இருந்தால் இரணைமடு குளத்தின் நீர்வரத்தை கருத்திற்கொண்டு, குளத்தின் வான்கதவுகள் திறப்பதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளன. 

எனவே, இரணைமடு குளத்தின் கீழ் பகுதியில் வாழும் மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X