Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
George / 2016 டிசெம்பர் 27 , மு.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி, பூநகரி, இரணைதீவில் உள்ள கால்நடைகள், திருடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரணைதீவில் இருந்த மக்கள், முற்றாக இடம்பெயர்ந்து, முழங்காவில் - இரணைமாதா நகரில் தங்கியுள்ள நிலையில், இரணைதீவில் பொது மக்களினால் கைவிடப்பட்ட நூற்றுக்கணக்கான கால்நடைகள், அப்பிரதேசத்திலேயே உள்ளன.
இந்நிலையில், அங்குள்ள அக்கால்நடைகள், இறைச்சிக்காக களவாடப்பட்டு வருவதாகவும் இரணைதீவில் இறைச்சிக்காக வெட்டப்பட்ட கால்நடைகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
“இக்கால்நடைகளை பாதுகாப்பதற்கான முயற்சிகளை, அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும், இரணைதீவில் மக்களை மீளக்குடியேற்றவும் கடற்றொழில் புரிவதற்கும் அனுமதிக்க வேண்டும்” என இரணைதீவு மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதனையடுத்து, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரணைதீவுக்குச் சென்றுவந்த நிலையிலும், இதுவரையிலுல் அங்கு மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை.
இரணைதீவு கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட அப்பகுதி, முழுமையாக கடற்படையினரின் பயன்பாட்டில் கடந்த 26 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகின்றது.
1992ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக வெளியேற்றப்பட்டு, இரணைமாதா நகர் என்ற மாதிரிக்கிராமம் உருவாக்கப்பட்மே இந்த மக்கள் குடியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கான வீட்டுத்திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் என்பனவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனினும், இம்மக்களின் கடற்றொழிலுக்கான வசதி வாய்ப்புக்கள், இதுவரை செய்துகொடுக்கப்படவில்லை.
336 குடும்பங்களைச் சேர்ந்த 1,214 பேர் மீள்குடியேறுவதற்கு விண்ணப்பித்துள்ள போதும், இதுவரை மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இரணைதீவு பகுதியில் தங்கியிருந்து தொழில் செய்வதற்கான அனுமதி வழங்கப்படாவிட்டாலும், அங்கு சென்று தொழில் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டு, அப்பகுதி மக்கள், பகல் நேரத்தில் அங்கு தொழில் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago