Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.அகரன்
வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபத்தில் கடந்த 1994ஆம் ஆண்டில் இருந்து நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் இன்றிலிருந்து வெளியேறியுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சு பொது இடங்களில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றும் செயற்பாட்டின் ஓர் கட்டமாக கலாசார மண்டபத்தில் இருந்து இராணுவம் வெளியேறியுள்ளது.
பல பொது அமைப்புகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் இவ் இராணுவ முகாமை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்ததுடன் அண்மையில் வடக்குக்கான இளைஞர் அமைப்பு என்ற அமைப்பினர் இவ் இராணுவ முகாமுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், இன்றில் இருந்து இராணுவம் வெளியேறியுள்ளதுடன் எதிர்வரும் தினங்களில் உத்தியோகபூர்வமாக இக் கட்டத்தினை மாவட்ட செயலகத்திடம் ஒப்படைக்கவும் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன், 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரிய அழுத்தத்தின் மத்தியில் இம் முகாம் தற்போது கைவிடப்பட்டுள்ளது. கூட்டமைப்பு தொடர்ந்தும் இராணுவத்தினர் மக்களின் பகுதியில் வாழ முடியாது என கொடுத்து வரும் அழுத்தமே இதற்கு காரணமாகும்.
இம் முகாம் விடுவிக்கப்படுவதற்காக குரல்கொடுத்து கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புகளுக்கு நன்றிகளை தெரிவிப்பதுடன் இதேபோன்ற ஒற்றுமையான செயற்பாடு தொடர்ந்தும் காணப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
8 hours ago
05 Jul 2025