2025 ஜூலை 12, சனிக்கிழமை

இராணுவம் வெளியேறும் வரை போராட்டம் தொடரும்: புதுக்குடியிருப்பு மக்கள்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 11 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன் 

புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் பொதுமக்களின் காணிகளிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம், இன்று ஒன்பதாவது நாளாகவும் தொடர்கின்றது.

19 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகள், வீடுகள் மற்றும் பொருளாதார நிலையங்கள் என்பவற்றை இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளனர்.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்கள், கடந்த 8 வருடங்களாக வாடகை வீடுகளிலும் உறவினர்களின் வீடுகளிலும் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் கடந்த 4ஆம் திகதியிலிருந்து போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை, நேற்றையதினம், பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்துக் கலந்துரையாடியிருந்ததுடன், அரசாங்கத்துக்குச் சொந்தமான காணிகளை இராணுவத்தின் தேவைக்கு பெற்றுக்கொண்டு, மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்திருந்தார்.

எனினும், மக்கள் தமது காணிகள் விடுவிக்கப்படும் வரை  போராட்டம் தொடரும் எனத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .