Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2022 மார்ச் 17 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொன்னையன் குடியிருப்பு தெற்கு கடற்கரை கரையோர பகுதியில், அதி நவீன தொழில் நுட்பத்தில் இறால் வளர்ப்பு பண்ணை அமைக்கப்பட்டு வருகின்றது.
ஏற்றுமதி தொழில் அபிவிருத்தியை ஊக்குவிக்கும் நோக்கோடு, தேசிய நீரியல் வளர்ப்பு அதிகார சபையின் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கு அமைவாக இப்பண்ணை அமைக்கப்படுகின்றது.
பெருந்தோட்ட அமைச்சின் வேளாண்மைத் துறை, நவீனமயமாக்கல் திட்டம், மதிப்பு சங்கிலி வளர்ச்சி மானியம் மற்றும் வங்கி கடன் உதவிகள் ஊடாக தனியார் ஒருவரால் இப் பண்ணை அமைக்கப்பட்டு வருகின்றது.
இதன் பணியை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நேற்று (16) பிற்பகல் நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்டார்.
வட மாகாணத்தில் முதல் தடவையாக வெளிநாட்டு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மன்னாரில் உருவாக்கப்பட்டு வரும் இந்த இறால் பண்ணை சுமார் 28 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், இப் பண்ணையை பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர், நவீனமயப்படுத்த உடன் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்துக்கு மேலதிக நடவடிக்கைகள் குறித்தும் திட்டம் தொடர்பாகவும் பண்ணை உரிமையாளரிடம் கேட்டறிந்து கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
11 minute ago
18 minute ago
25 minute ago