2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

உரமானியக் காப்புறுதி இழப்பீட்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

Niroshini   / 2017 ஜனவரி 30 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்

ஒட்டுசுட்டான் கமநல சேவைகள் நிலையத்தின் கீழ்,  2016 - 2017 ஆம் ஆண்டுக்கான காலபோக நெற்ச்  செய்கையின் போது, வரட்சி காரணமாக அழிவடைந்த, ​நெற்ச் செய்கைக்கான உரமானியக் காப்புறுதி  இழப்பீட்டு வழங்க, விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

2,854 விவசாயிகளின் 8,731 ஏக்கர் நெற்ச் செய்கைக்கான உரமானியக் காப்புறுதி இழப்பீட்டை பெற்றுக் கொடுப்பதற்கான விண்ணப்பங்களே, கமக்கார அமைப்புக்களின் ஊடாக விவசாயிகளுக்கு விநியோக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ஒட்டுசுட்டான் கமநல சேவை நிலையத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.                

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், “ஒட்டுசுட்டான் கமநல சேவை நிலையத்தின் கீழ் முத்தையன் கட்டுக்குளத்தின் கீழ், 1,126 விவசாயிகளின் 3,476.75 ஏக்கரிலும், சிறிய நீர் பாசனக் குளங்களின் கீழ், 865 விவசாயிகளின் 2,894.5 ஏக்கரிலும், மானாவாரியாக 863 விவசாயிகளின் 2,360 ஏக்கருமாக மொத்தம் 2,854 விவசாயிகளின் 8,731.25 ஏக்கர் காலபோக நெற்ச் செய்கை அழிவடைந்துள்ளது. 

உரமானியக் காப்புறுதிக்கான இழப்பீட்டை பெற்றுக் கொடுப்பதற்கான  விண்ணப்பங்கள்,  31  கமக்கார அமைப்புகளின் ஊடாக வழங்கப்படவுள்ளன.

விண்ணப்பங்களை பூரணப்படுத்தி,  எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 திகதிக்கு முன்னர், ஒட்டுசுட்டான் கமநல சேவை நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். குறித்த காலப்பகுதியில் விண்ணப்பிக்கத் தவறும் விவசாயிகளுக்கு காப்பீடு வழங்க முடியாத நிலை ஏற்படும் என்பதை விவசாயிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .