Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
க. அகரன் / 2018 மே 30 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா மத்திய சுற்றாடல் அதிகாரசபை, நகரசபை மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் உலக சுற்றாடல் தினம் இன்று (30) வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து ஆரம்பமாகி விழிப்புணர்வுப் பேரணியாக மணிக்கூட்டு சந்தி வழியாக வைரவப்புளியங்குளத்தை வந்தடைந்து அங்கு வீடு வீடாக பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் கழிவுப்பொருட்களை பிரித்து அதனை சுத்திகரிப்பது தொடர்பான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இந் நிகழ்வில் கூமாங்குளம் சித்திவிநாயகர் பாடசாலை, இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை, சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி, இரம்பைக்குளம் மகளிர் கல்லூரி, வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
'உயிரிகளின் உயிர் நாடியான ஈர நிலங்களை காப்பது எமது கடமை” எனும் தொனிப்பொருளில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன், உப தலைவர் எஸ்.குமாரசாமி, தெற்கு வலயத்தின் பணிப்பாளர் மு.ராதாகிருஸ்ணன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
24 minute ago
45 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
45 minute ago
49 minute ago