2025 ஜூலை 12, சனிக்கிழமை

உழுந்து பயிர்ச் செய்கையில் அதிகரிப்பு

Princiya Dixci   / 2017 ஜனவரி 01 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.கண்ணன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

கடந்த காலத்தை விட தற்போது உழுந்து பயிர்ச் செய்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் ஆர்.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்துக்குட்பட்ட பகுதிகளில் 2016 -2017 காலபோக பயிர்ச் செய்கையின் போது உப  உணவுப் பயிரான உழுந்துச் செய்கையினை பதினெட்டாயிரம்   ஏக்கரில்  விவசாயிகள்  மேற்கொண்டுள்ளனர்.

வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்துக்குட்பட்ட  எட்டு கமநல சேவை நிலையங்களின் கீழ் உள்ள விவசாயிகள் தமது  மேட்டுநிலக் காணிகளில் உழுந்துப் பயிர்செய்கை மேற் கொண்டுள்ளனர்.  உழுந்துப் பயிர் செய்கைக்கு மழை வீழ்ச்சி குறைவாக இருந்த போதும் தற்போது பனியின் தாக்கம் நன்மையாகவே காணப்படுகின்றது. கடந்த காலங்களை விட இம்முறை அதிகமாக உழுந்துப் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆயினும் இனிவரும் மாதங்களில் கால நிலை மாற்றம் ஏற்பட்டு தொடர்ந்து அதிக மழை பெய்யும் பட்சத்தில் உழுந்து செய்கை பாதிக்கப்படக் கூடிய சூழ்நிலை ஏற்படலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .