Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
George / 2017 பெப்ரவரி 19 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.அகரன்
அண்மையில் திறந்து வைக்கப்பட்ட, வவுனியா நகரசபைப் பொது பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சல் ஒன்று, அடியோடு பாறி விழுந்ததால் ஊஞ்சல் ஆடிய சிறுவன் காயமடைந்துள்ளதுடன், இரு சிறுவர்கள் காயங்கள் ஏதுமின்றி தப்பியுள்ளனர்.
சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, “10 மில்லியன் ரூபாய் நிதியில் புனரமைக்கப்பட்டு, அண்மையில் திறந்து வைக்கப்பட்ட வவுனியா நகரசபை பொது பூங்காவில், இரும்பு குழாய்கள் மூலம் பொருத்தப்பட்டு அமைக்கப்பட்டிருந்த மூன்று பேர் ஆடக்கூடிய ஊஞ்சலில், மூன்று சிறுவர்கள் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்த போது, ஊஞ்சல் அடியோடு பாறிச் சரிந்து விழுந்துள்ளது.
இதன்போது ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்த சிறுவன் நிலத்தில் விழுந்து அடிபட்டதுடன், ஊஞ்சலில் அகப்பட்டு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
அதே ஊஞ்சல் இணைப்பில் ஆடிய இரு சிறுவர்கள், ஊஞ்சல் பாறி விழுந்த போது குதித்து தெய்வாதீனமாக காயங்கள் எதுவுமின்றி தப்பியுள்ளனர்.
காயமடைந்த சிறுவன், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி பயிலும் மாணவன் ஆவான்.
ஊஞ்சல் அமைக்கப்பட்ட குழாய்கள் ஆழமாக புதைக்கப்படாததன் காரணமாகவே பாறி விழுந்துள்ளதாக அங்கு நின்ற மக்கள் பொதுமக்கள் விசனம் தெரிவித்திருந்ததுடன், தமது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வீடு திரும்பிவிட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago