2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

ஊடகவியலாளரை அச்சுறுத்திய இராணுவம்.

Niroshini   / 2021 மே 12 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-விஜயரத்தினம் சரவணன்

தமிழர்களின் பூர்வீக முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர்மலைக்கு செய்திசேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவர், நேற்று இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

கொவிட் -19 அசாதாரண நிலையினைப் பொருட்படுத்தாது, குருந்தூர்மலையில் பெருமெடுப்பில் நிகழ்வொன்று இடம்பெறுவதாக கிடைத்த தகவலுக்கு அமைவாக, அங்கு செய்தி சேகரிக்கச்சென்றபோதேஇ குறித்த ஊடகவியலாளர் இராணுவத்தினால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

தற்போதை கொவிட் தொற்று அசாதாரண நிலையையும் கருத்தில்கொள்ளாதுஇ நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக குருந்தூர்மலைப் பகுதிக்கு பெருமளவில் இராணுவத்தினர் வருகைதந்திருந்தனர்.

அவ்வாறு இராணுவத்தினர் வாகனத்தில் தொடரணியாக குருந்தூர் மலைவீதியில் வருகைதரும்போதுஇ  இராணுவ வாகனங்களை குறித்த ஊடகவியலாளர் புகைப்படம் எடுத்திருந்தார்.

இந்நிலையில், புகைப்படம் எடுக்கக்கூடாது என இராணுவத்தினர் தடுத்ததுடன்இ குறித்த ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திஇ அவரை அச்சுறுத்தும்வகையில் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .