Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2017 மார்ச் 04 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
“பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் காணி விடுவிப்புக்கான போராட்ட வெற்றிக்கு ஊடகவியலாளர்களும், ஊடகங்களுமே உரிமை கோர தகைமை கொண்டுள்ளனர்” என, வடமாகாண சபை உறுப்பினர் செல்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் நேற்று (3) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
“பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் காணி விடுவிப்புக்கான போராட்டம் வெற்றியின் விழிம்பு வரை வந்திருப்பதற்கு தனிப்பட்ட ரீதியில் யாரும் உரிமை கோர முடியாது.
இறுதி வரை தம் சொந்த காணிகளுக்குள் கால் வைத்த பின்பே போராட்டத்திலிருந்து பின் வாங்குவோம் என்ற உறுதியான நிலைப்பாடே அவர்களுக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளது.
உலகையே உன்னித்து பார்க்கச்செய்த, உதிரத்தோடு உறைந்து போன அவர்களின் விடுதலை வேட்கையே வெற்றிக்கு வித்திட்டது.
இவர்களுக்கு பக்கபலமாக உள்நாட்டு, சர்வதேசஅச்சு, இலத்திரனியல் ஊடகங்களின், சமூகவலைத்தளங்களின் பங்களிப்பு மண்மீட்புப் போராட்டத்தின் அனைத்து மட்ட பரிமாணங்களையும் உரியவர்களின் கண்களுக்கும், காதுகளுக்கும் கொண்டு செல்ல பேருதவியாக அமைந்தது.
இந்த மக்களின் செய்தி எங்கு போய்ச் சேர வேண்டுமோ அங்கு கொண்டு சென்ற ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் வெற்றிக்கு உரிமை கோர தகைமை கொண்டுள்ளனர்.
அரசியல் ரீதியாக இவ்விடயம் முடிவுக்கு கொண்டுவர ஆரோக்கியமான பேச்சுக்களை அரச தலைவர்களுடன் விவேகமான முறையில் நடாத்தி கோரிக்கைகள் நிறைவேற, தம் தலையாய கடமை என உணர்ந்து செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு பிலக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு மக்கள் நன்றியுடையவர்களாக இருப்பார்கள்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago