Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஏப்ரல் 27 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஏ-9 பிரதான வீதியை மறித்து, கதறி அழுது போராட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய நிர்வாகத்தினர், தங்களின் பொதுச்சபை கூட்டத்தை ஆலய அன்னதான மண்டபத்தில் நடத்தியுள்ளனர்.
பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆலய பொதுச் சபை உறுப்பினர்களின் ஒரு பகுதியினரின் எதிர்ப்பையும் மீறி, இவ்வாறு செயற்பட்டமை காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள், பொது அமைப்புக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆலய முன்றலில் வீதியில் இறங்கி போராடி வரும் போது, ஆலய நிர்வாகம் போராட்டம் நடத்தப்படுகின்ற இடத்திலேயே தங்களின் பொதுச் சபைக் கூட்டத்தை நடத்தியமைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பூரண கதவடைப்பு போராட்டத்துக்கு, கிளிநொச்சியில் வர்த்தக சமூகம், கல்விச் சமூகம், பொது அமைப்புகள், விவசாய அமைப்புகள், அரசியல் கட்சிகள் என பலரும் தங்களின் ஆதரவை வழங்கி, வழமையான செயற்பாடுகளை நிறுத்திய நிலையில், தங்களின் ஆலய முன்றலில் நடத்தப்படுகின்ற போராட்டத்தை கவனத்தில் எடுக்காது, ஆலய நிர்வாகம் பொதுச் சபை கூட்டத்தை நடத்தியுள்ளது.
பொதுச் சபை உறுப்பினர்களின் ஒரு பகுதியினர் குறித்த கூட்டத்தை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்த போதும் அதனையும் ஏற்காத நிர்வாகம், கூட்டத்தை நடத்தியுள்ளது” என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடந்த 25 ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த ஆலயத்தின் வெளிப்புறமாக உள்ள சிறிய அறை ஒன்றை 30 நிமிடங்களுக்கு கோரிய போதும், அதனை நிர்வாகம் வழங்க மறுத்தமை குறிப்பிடத்தக்கது.
9 minute ago
18 minute ago
28 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
18 minute ago
28 minute ago
2 hours ago