Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2017 பெப்ரவரி 01 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி, பூநகரி ஜெயபுரம் கிராம மக்களுக்கான வயல் நிலங்களை இந்த வருடத்திலாவது பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
1983ஆம் ஆண்டு, இந்தக் கிராமம் உருவாக்கப்பட்டபோது, தேவன்குளத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 526 ஏக்கர் வயல் நிலத்தில், நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்தி, பயிர்ச் செய்கைக்கான வசதிகளை செய்து தருவதாகவும் கூறப்பட்டு, மக்கள் குடியேற்றம் செய்யப்பட்டனர்.
போர்ச்சூழல் காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்வுகளையடுத்து தற்போது, மீள்குடியேற்றம் செய்யப்பட்ட நிலையில், தங்களுக்கு வழங்குவதாகக் கூறப்பட்ட வயல் காணிகள் இன்னமும் பகிர்ந்தளிக்கப்படவில்லை என மக்கள் கூறுகின்றனர்.
கிராம மக்களுக்கான வயல் நிலத்தினை பகிர்ந்தளிப்பதற்கான அரசாங்கம் மற்றும் மகாணசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வடமாகாண விவசாய அமைச்சு, வயல் நிலம் பகிர்ந்தளிப்பு விடயத்தில் அக்கறை காட்ட வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago
4 hours ago
4 hours ago